Reviews

டெவில் – விமர்சனம் !

Published

on

Cast: Vidharth, Thrigun, Poorna, Subhashree
Production: Maruthi Films & H Pictures
Director: Aathityaa
Cinematography: Karthik Muthukumar
Editing: Elayaraja.S
Music: Mysskin
Language: Tamil
Runtime: 1H 58Mins
Release Date: 02/Feb/ 2024/

 

படத்தின் ஆரம்பித்திலேயே சாத்தான் என சில கார்டுகளை காட்டி யாரோ யாரையோ கொலை செய்து இழுத்துச் செல்வது போல் காட்டி அதில டெவில் என படத்தின் தலைப்பு போடுகிறார்கள்.

கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர் பூர்ணா வீட்டில் பெற்றோர்கள் பேசி விதார்த்தை திருமணம் செய்து வைக்கிறார்கள். மிகவும் பிரபலமான வக்கீல் ஆன விதார்த் தன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் உதவியாளர் சுபஸ்ரீயுடன் கள்ள தொடர்பில் இருக்கிறார்.

கள்ள தொடர்பில் மிகவும் கேவலமான கள்ள தொடர்பு அது எப்படி என்றால் பூர்ணாவை திருமணம் கட்டி முதல் இரவில் கூட அவருடன் இருக்காமல் நடு இரவில் எழுந்து சுபஸ்ரீ இருக்கும் இடத்திற்கும் செல்லும் அளவுக்கு இருக்கிறது இவர்களின் அந்த கள்ள தொடர்பு. இதை ஒரு கட்டத்தில் அறிந்து அதிர்ச்சியடைகிறார் பூர்ணா. இதனால் தன் காரை நடிகர் திரிகுண் மீது இடித்தும் விடுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுக்கிறார் பூர்ணா. இதனால் இவர்கள் இருவருக்கும் ஏற்படும் பழக்கம் நாளடைவில் இவர்கள் இருவருக்கும் கள்ள தொடர்பு ஆகிறது. பூர்ணா – திரிகுன் கள்ள தொடர்பிலும், விதார்த் – சுவாஸ்ரீ இருவரும் கள்ள தொடர்பில் இருக்க இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.

திருமண வாழ்க்கையில் ஏற்படும் கள்ள தொடர்பு அவர்களின் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதை இடைவேளை முன்னர் வரை உணர்வுபூர்வமாகவும் இடைவேளைக்கு பின்னர் த்ரில்லர் கதையாகவும் படத்தின் இறுதியில் பக்தியாகவும் சொல்லி உள்ளார் இயக்குநர் ஆதித்யா.

தன் கணவன் தன்னை ஏமாற்றி கோபத்தில் வேறு ஒரு ஆணுடன் கள்ள தொடர்பில் இருக்கும் பூர்ணா. ஏமாற்றம், தவிப்பு, தவிர்க்க முடியாத வரம்பு மீறிய காதல் என உணர்வுபூர்வமாக நடித்துள்ளார் நடிகை பூர்ணா. இவரின் ஆகச்சிறந்த நடிப்புதான் படத்தை மொத்தமாக தாங்கி பிடிக்கிறது.

படம் ஆரம்பித்து மிக நீண்ட நேரத்திற்கு பின்னரே விதார்த் கதாப்பாத்திரம் திரையில் வருகிறது. முக பாவனை அப்பாவி போல வைத்துக்கொண்டு இவர் பார்க்கும் போது எழுந்து போய் நாமே விதார்த் அவர்களை அடித்து கொலை செய்து விடலாமோ என்ற அளவுக்கு இருக்கிறது அவரின் கதாப்பாத்திர வடிவமைப்பு. அதே போல மனைவியிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியில் அற்புதமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார் விதார்த்.

திரிகுண் அவரின் நடிப்பை பார்க்கும் போது தமிழ் சினிமாவிற்கு புதிதாக ஒரு வில்லன் கிடைத்து விட்டதாக தெரிகிறது. மிரட்டி எடுக்கிறார் ஒரு ஒரு காட்சிகளில்.

சுபஸ்ரீ அவரின் அறிமுக காட்சியே யார் இந்த ஹீரோயின் என்று கேட்க வைக்கிறது. படத்தில் ஒரு சில காட்சிகள் வந்தாலும் கதைக்கு முக்கியமான மற்றும் திருப்புமுனையான கதாப்பாத்திரம்.

படத்தின் பல கதாப்பாத்திரங்கள் வந்தாலும் விதார்த், பூர்ணா, திரிகுண் மூவரும் ஒட்டுமொத்த இடங்களையும் ஆக்கிரமித்துள்ளார்கள்.

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இயக்குநர் மிஷ்கின் பாராட்டியக்குரிய இசையாக அமைந்துள்ளது.

காதல், கள்ளக் காதல், துரோகம் என உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கும் கதை அதே பாதையில் முடியும் என காத்திருக்கும் நமக்கு இறுதிக்கட்டம் முழுக்க முழுக்க பக்தி பரவசம் போல முடிவடைவது கொஞ்சம் அதிர்ச்சி அதியசம். ஒரு உணர்வுபூர்வமான கதைக்கு எப்படிப்பட்ட ஒரு முடிவா வரும் என சிந்திக்க வைக்கிறது.

 

Rating : 3/5

 

Trending

Exit mobile version