Reviews
டிடி நெக்ஸ்ட் லெவல் – திரைவிமர்சனம் !

Cast: Santhanam, Geethika , Selvaraghavan, Gautham Vasudev Menon, Nizhalgal Ravi, Kasthuri, Redin Kingsley, Yashika Anand, Motta Rajendran, Maran
Production: Niharika Entertainment
Director: S. Prem Anand
Screenplay:
Cinematography: Dipak Kumar Padhy
Editing: Barath Vikraman
Music: ofRO
Language: Tamil
Runtime: 2H 13Mins
Release Date: 16 May 2025
கதை ஆரம்பம் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கேம் ஷோவை கையில் எடுத்துக் கொண்டு அதில் பேய்களை பறக்கவிட்டு காமெடியில் கதறவிட்டு இருந்தார் சந்தானம். இந்நிலையில், இந்த படத்தில் இயக்குநர் பிரேம் ஆனந்த் தமிழ் சினிமா விமர்சகர்களை வைத்து செய்யலாம் என நினைத்து ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) எனும் பேய் விமர்சகர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தூக்கிக் கொண்டு போய் படத்திற்குள் கதாபாத்திரமாக தள்ளி கொலை செய்கிறார். கிருஷ்ணா என்கிற பெயரை யூடியூபில் விமர்சனம் சொல்வதற்காக கிஸ்ஸா என மாற்றிக் கொண்டு படங்களை கழுவி ஊற்றி வரும் சந்தானத்தையும் அவரது குடும்பத்தையும் படம் பார்க்க அழைத்து வந்து ஒரு படத்துக்குள் தள்ளி கொல்ல முயற்சிக்கிறார். அங்கே இருந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் கிஸ்ஸா காப்பாற்றினாரா? என்பது மீதி கதை.
படம் எப்படி இருக்கு
நடிகர் சந்தனம் மற்றும் படத்தை தனது தோளில் சுமந்து போறாரு அவரோட காமெடி டைமிங் கலாட்டா அதுக்கப்புறம் அவர் பண்ற ஸ்டண்ட் எல்லாமே சூப்பரா இருந்துச்சு சிறப்பாக இருந்துச்சு. சந்தானத்தின் புது கெட்டப் சற்றே துருத்திக் கொண்டு இருந்தாலும் கிஸ்ஸா கதாபாத்திரமாக மாற அவர் மெனக்கெட்டு இருப்பதால் போக போக பழகி விடுகிறது. மேலும் மொட்ட ராஜேந்திரன் மற்றும் சந்தானம் இடையே நடக்கும் காமெடி ட்ராக் மிக சிறப்பாக இருக்கிறது.
நடிகர் அடக்க ஒடுக்கமாக வரும் தங்கை யாஷிகா ஆனந்த் எதிர்பார்த்தபடியே அத்தனை கவர்ச்சியாக படத்துக்குள் கெளதம் மேனனுக்கு ஜோடியாக மாறுவது மற்றும் ஹீரோவின் காதலி விஷயத்தில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் என எழுத்தாகவும் ஸ்க்ரீனில் காட்சிகளாகவும் அமர்க்களமாக இருக்கிறது.
மேலும் அப்பா ஆட்டோ டிரைவராக வரும் நிழல்கள் ரவி மற்றும் ஹோம்லி அம்மாவாக இருக்கும் கஸ்தூரி கவர்ச்சி திருடியாக இருவரும் சிறப்பான நடிப்பை வெளிபடுதியுள்ளார்கள்.
கதாநாயகியாக வரும் கோபிகா அவர்கள் பேய்யாக வருகிறார் அவர்கள் பெரிதாக எந்த அளவு காட்சிகளும் அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் இயக்குனர் பிரேம் ஆனந்த் மிகச்சிறப்பான திரைக்கதையை அமைத்துள்ளார் மேலும் படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக அமைந்திருந்தால் படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்திருக்கும் என்பது படம் பார்த்த அனைவரையும் அனைவரின் கருத்து ஆகும்.
பின்னணி பாடல் பெரிதாக பேசும்படி இல்லை. படத்திற்கு ஒளிப்பதிவு தூணாக வந்து நிற்கிறது.
பிளஸ்:
சந்தனம் நடிப்பு ,கதை களம் மற்றும் ஒளிப்பதிவு
மைனஸ்:
தேவையற்ற கதாபாத்திரங்கள். படத்தின் இரண்டாம் பாதி
Rating [3/5]