Connect with us
 

News

தனுஷ் – ஜஸ்வர்யா இடையே நடந்தது வெறும் சண்டைதான் விவாகரத்து இல்லை !

Published

on

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் கஸ்தூரி ராஜா இவருக்கு இரண்டு மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகன் இயக்குநர் செல்வராகவன். இரண்டாவது மகன் தனுஷ். இவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இது பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் ஆகும்.

இவர்களின் திமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது இவர்கள் இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் யாத்ராவுக்கு 15 வயது ஆகிறது.

இந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து விட்டார்கள். இரண்டு பேரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் இனிமேல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கப்போவதாகவும் அறிவித்தார்கள்.

இது பற்றி தனுஷ் தந்தை கூறும்போது தனுஷும், ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது கணவன் – மனைவி இடையே நடக்கும் வழக்கமான குடும்ப சண்டைதான். இருவரும் விவாகரத்து செய்யவில்லை. இரண்டு பேருமே இப்போது சென்னையில் இல்லை. ஜதராபாத்தில் இருக்கிறார்கள். நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் இருவருக்கும் சில அறிவுரைகளை சொன்னேன் என்று கஸ்தூரிராஜா கூறியுள்ளார்.