News
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனுஷ் ?

குரங்கு பொம்மை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா மாபெரும் பிரம்மாண்ட வசூலை பெற்றது மட்டுமின்றி விமர்சக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நித்திலன் சுவாமிநாதன் அடுத்து என்ன படம் இயக்க போகிறார் யாரை வைத்து இயக்க போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவரின் அடுத்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி நடிகர் தனுஷ் அவர்களை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும் அந்த கதை தனுஷ் அவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.