News
ஒரு ராஜா நல்லவர் மற்றொரு ராஜா கெட்டவர் – தனுஷ் !

நடிகர் Dhanush தற்போது அவரது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் நாளை அதாவது செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கலைப்புலி தானு அவர்கள் Dhanush முதல் பாதியில் நல்லவராகவும் இரண்டாம் பாதியில் மிகவும் கெட்ட ஒரு வில்லனாகவும் வருகிறார் என்று கூறியிருந்தார்.இந்த நிலையில் தற்போது தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ‘‘ஒரே ஒரு ஊருக்குள்ளே இரண்டு ராஜா இருந்தாராம் அதில் ஒரு ராஜா நல்லவராம் இன்னோரு ராஜா கெட்டவராம்’
இதிலிருந்து ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் அதில் ஒருவர் வில்லன் என்றும் ஒருவர் வில்லன் என்று தெரிகிறது. Dhanush – வில்லனாக எப்படி நடித்திருப்பார் என்று எதிர்பார்ப்பு மிகவும் ஆர்வமாக உள்ளது என்று ரசிகரகள் தற்போது இணையத்தில் பதிவுகளை செய்து வருகிரார்கள்.