Connect with us
 

News

இரண்டாம் பாகம் எடுக்க சொல்லி தொல்லை கொடுக்கும் தனுஷ் !

Published

on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து ஜூன் 18-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். வைநாட் ஸ்டுயோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைமெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இலங்கை வாழ் தமிழ் லண்டன் பெண்ணாக நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ச் படத்தின் வில்லனாக நடித்துள்ளனர்.

நேற்று இப்படம் பற்றி தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சந்தோஷ் நாராயணன் டுவிட்டர் ஸ்பேசில் கலந்து கொண்டனர்.

இதில் தனுஷ் பேசும் போது ஜகமே தந்திரம் படத்தின் வெளியீட்டுக்காக ரொம்ப நாளாக காத்துக்கொண்டிருந்தேன். கடைசியாக இப்படம் மக்களிடம் போய் சேரயிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த சுருளி கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க சொல்லி தொல்லை கொடுத்துக்கொண்டேயிருக்கிறேன். எனக்கு அந்த அளவுக்கு சுருளி கதாப்பாத்திரம் பிடிக்கும்.

கண்டிப்பாக இப்படம் என் ரசிகர்களுக்கு மட்டுமல்ல மற்ற ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறது. ஆனால் பாடல்களை விட படத்தின் பின்னணி இசை மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.