News
கர்ணன் படத்திற்கு பின்னர் தனுஷ் – மாரி செல்வராஜ் இணையும் பிரம்மாண்ட திரைப்படம் !

கர்ணன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியானது.
மிக நீண்ட வருட இடைவெளிக்கு பின்னர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இது இவர்களின் 15-வது தயாரிப்பு ஆகும்.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியிட்டார்.
தனுஷ் சினிமா பயணத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாகவும் இப்படம் உருவாகவுள்ளது. பல்வேறு பல முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி தொழிநுட்ப வல்லுநர்கள் இணைந்து இப்படத்தில் பணியாற்றவுள்ளனர். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும்.