News

மீண்டும் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் தனுஷ் படம் !

Published

on

கொரோனா பரவல் அதிகரித்ததால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது இதன் காரணமாக திரையரங்குகளில் வெளியாக வேண்டிய பல சூப்பர் ஹிட் படங்களில் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிலும் சில படங்களில் திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி ஓடிடி தளத்தில் வெளியானது அதில் சூர்யாவின் சூரரை போற்று, பூமி, மூக்கித்தி அம்மன், பொன்மகள் வந்தால், டேனி, பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், பரமபதம் விளையாட்டு போன்ற படங்களும் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த படத்தை அதே சமயம் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜெகமே தந்திரம் படமும் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தை திரையரங்கில்தான் வெளியிட வேண்டும் என்றும் தனுசும் அவரின் ரசிகர்களும் வற்புறுத்தி வந்தனர். அதையெல்லாம் மீறி அப்பட ஓடிடி தளத்தில் வெளியானது.இது தனுஷ் மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிச்சியாக அமைந்தது.

இந்தநிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படமும் பொங்கள் பண்டிகையையொட்டி ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆனாலும் இதை படக்குழு உறுதி செய்யவில்லை.

இப்படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர்களுடன் அமீர், சமுத்திரக்கனிம் ஸ்ருதி வெங்கட், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Trending

Exit mobile version