News
தனுஷ் நடிக்கும் வாத்தி பட முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொசஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என இன்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சாய்குமார், சமுத்திரக்கனி ஆகியோரும் நடித்துள்ளனர்.