News
சந்திரபாபு வாழ்க்கை கதையில் நடிக்கும் தனுஷ்?

மறைந்த தமிழ் நடிகர் சந்திரபாபு வாழ்க்கை வரலாற்று கதையில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் 1950 முதல் 1960-களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகராக கொடி கட்டி பறந்தவர் சந்திரபாபு அந்த காலகட்டத்திலேயே நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய நடிகர். இவர் பாடிய குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே, உனக்காக எல்லாம் உனக்காக, மற்றும் நானொரு முட்டாளுங்க பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத பாடலாக உள்ளது.
சென்னையிலுள்ள ராஜா அண்ணாமலையில் அந்த காலகட்டத்திலேயே 20 கிரவுண்ட் நிலத்தில் பங்களா வீடு கட்டி செல்வா செழிப்போடு வாழ்ந்து வந்தார் சந்திரபாபு.
ஒரு காலகட்டத்தில் சொந்தமாக படம் எடுக்க ஆரம்பித்தார் அதிலிருந்து அவரின் அழிவு காலமும் ஆரம்பமானது. தயாரித்த படங்கள் சரியாக போகாமல் அனைத்து சொத்துக்களையும் இழந்து கடனாளி ஆகி குடி பழக்கத்துக்கும் அடிமையாக அவரின் 47-வது வயதில் மரணம் அடைந்தார்.
இவரின் இந்த வாழ்க்கை வரலாற்று கதையில் நடிகர் தனுஷ் சந்திரபாபு வேடத்தில் நடிக்க தற்போது தனுஷிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறாம். இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.