News
ஜூன் மாதத்திற்கு தள்ளி போகும் தனுஷ் 50வது படம் !

கேப்டன் மில்லர் படத்திற்கு பின்னர் தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தில் தனுஷ் ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் படமாக உருவாகவுள்ளது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஏப்ரல் இறுதியில் வெளியிட திட்டமிருந்த நிலையில் தற்போது இப்படம் ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ராயன் என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.