News

தனுஷ் இயக்கும் 50-வது படம் உலக தரத்தில் இருக்கும் – எஸ்.ஜே.சூர்யா !

Published

on

தனுஷ் இது வரையில் 49 படங்கள் நடித்துள்ளார். அவரின் 50-வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், அபர்னா பாலமுரளி, சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இன்னும் இப்படத்திற்கு பெயரிடப்பவில்லை.

இந்த நிலையில் தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு நிலாவுக்கு என்மேல் என்னடி கோபம் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் இயக்கும் 50வது படம் பற்றி நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள பதிவில் ‘ தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல சூப்பர் இயக்குநரும் கூட. தனுஷுக்கு டைரக்ஷன் மேல என்ன ஒரு வெறி. என்ன ஒரு அர்ப்பணிப்பு அவர் வேற லெவல். தனுஷ் 50-வது படத்தின் கதையும் வித்தியாசமான ட்ரீட்மென்டும் சர்வதேச தரத்தில் இருக்கிறது என கூறினார்.

 

Trending

Exit mobile version