News
தனுஷ் 50-வது படத்தில் ஜோடியாக த்ரிஷா !

கேப்டன் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்துக்கு பின்னர் தனது 50-வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தை தனுஷ் அவர்களே இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மிக நீண்ட நாட்களாக த்ரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்ததாகவும் தற்போது த்ரிஷா ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.
தற்போது த்ரிஷா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர விடாமுயற்சி மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் 234-வது படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.