News

தனுஷ் 50-வது படம் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் !

Published

on

தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது 50-வது படத்தை தானே இயக்கி நடிக்கப் போகிறார். இப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தனுஷின் 50-வது படம் ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது. புதுப்பேட்டை படத்தில் தான் நடித்த கொக்கி குமார் கதாப்பாத்திரத்தை மீண்டும் தனுஷ் நடிக்கவுள்ளார். இதற்காக தனுஷ் தலை முடி, தாடி எல்லாம் நீளமாக வளர்ந்துள்ளார் என கூறப்படுகிறது. புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கொக்கி குமார் என டைட்டில் வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version