Connect with us
 

Reviews

ராயன் – விமர்சனம் !

Published

on

Cast: தனுஷ், எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், திலீபன்
Production:சன் பிக்சர்ஸ்
Director: தனுஷ்
Screenplay: தனுஷ்
Cinematography: ஓம் பிரகாஷ்
Editing: பிரசன்னா
Music:ஏ. ஆர். ரஹ்மான்
Language: Tamil
Runtime: 2H 25Mins
Release Date: 26/July/2024

தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். இப்படம் தனுஷின் 50-வது திரைப்படம். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

தந்தை மற்றும் தாய் சிறு வயதிலேயே காணாமல் போக இரண்டு தம்பிகள் காளிதாஸ், சந்தீப் தங்கை துஷாரா விஜயன் ஆகியோரை வளர்த்து வருகிறார் தனுஷ். சென்னையில் ஒரு பாஸ்ட் புட் உணவகம் நடத்தி வருகிறார் தனுஷ்.

சென்னையில் உள்ள மிகப்பெரிய இரண்டு ரவுடிகள் சரவணன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா கடந்த 5 வருடங்களாக இருவரும் எந்த வித மோதலும் இல்லாமல் சமரமாக இருந்து வருகிறார்கள். அதே சென்னைக்கு போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் தன் தந்தையை நாடு ரோட்டில் வைத்து எரித்து கொன்ற ரவுடிகளை மொத்தமாக அழிப்பேன் என சபதம் எடுக்கிறார்.

சபதம் எடுத்தாலும் இரண்டு ரவுடிகளும் அடித்து கொள்ளாமல் இருந்தால் எப்படி அவர்களை கைது செய்வது என காரணம் தேடி கொண்டு இருக்கிறார். இவர்களுக்கு சண்டை வர இவரே ஒரு சில ரவுடிகளை வைத்து சரவணின் மகனை கொலையும் செய்கிறார். அதில் தனுஷ் தம்பி சந்தீப் கிஷன் தெரியாமல் மாட்டிக்கொள்கிறார்.

இதனை தெரிந்து கொண்ட சரவணன் தனுஷுக்கு போன் செய்து உன் தம்பியை என்னிடம் விட்டு விடு இனி உனக்கு ஒரு தம்பி ஒரு தங்கை எனவும் சொல்கிறார். ஆனால் அடுத்த நிமிடமே தனுஷ் தன் தம்பிகளோடு சென்று சரவணனை சம்பவம் செய்கிறார்கள்.

சரவணனை கொலை செய்தது யார் என ஒரு பக்கம் போலீஸ் அதிகாரியான பிரகாஷ்ராஜ் விசாரிக்க மறுபக்கம் எஸ்.ஜே.சூர்யா விசாரிக்க இடையில் மாட்டிக்குக்கொள்ளும் தனுஷின் வாழ்க்கையும் தம்பிகளின் வாழ்க்கையும் என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை.

தனுஷின் 50வது படமான இப்படத்தை இயக்கி நடித்துள்ளார். மொட்டை அடித்து கொஞ்சம் முடி வளர்வது போல தலை, பெரிய மீசை, எதற்கும் பயமில்லாத தோரணை, வெறித்தமான பார்வை என ராயன் கதாப்பாத்திரத்தில் இருக்கும் தனுஷ் இடைவேளைக்கு பின்னர் ரத்தம் தெறிக்கும் கொலை வெறி ஆட்டம் என வேறுபட்ட இரு விதமான நடிப்பை சிறப்பாக நடித்துள்ளார்.

தனுஷ் தம்பிகளாக வரும் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் குடும்பத்திற்கு அடங்காத தம்பியாக தனக்கு பிடித்ததை மட்டுமே செய்யும் நபராகவும் அண்ணனை எதிர்த்து பேசும் நபராகவும் அற்புதமாக நடித்துள்ளார். அண்ணனின் பேச்சுக்கு மரியாதை கொடுக்கும் இன்னொரு தம்பியாக வரும் காளிதாஸ் அடக்கமாக இருந்து கொண்டு ஒரு கட்டத்தில் சங்கில் பாயும் போது நமக்கே ஆச்சர்யமாக இருந்தது.

தனுஷ் தங்கையாக வரும் துஷாரா விஜயன் அண்ணனுக்காக எதையும் செய்யும் பாசமுள்ள தங்கையாக சிறப்பாக நடித்துளார். முக்கியமாக அதிரடி ஆக்சன் காட்சிகளில் ரத்தம் தெறிக்கும் சண்டைகளிலும் இவருக்கு உள் இருக்கும் நடிப்பு அரசி திரையில் முழுவதுமாக தோன்றுகிறது.

வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யா தனக்கே உரித்தான வில்லனத்தனத்தில் மிரட்டியுள்ளார். அண்ணனாக வரும் செல்வராகவன் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கைதட்டல் பெறுகிறார். குறிப்பாக இவர் இறக்கும் காட்சியில் பேசும் வசனம் எல்லாம் மாஸ்.

போலீஸ் அதிகாரியாக சிறப்பு தோற்றத்தில் வரும் பிரகாஷ் ராஜ் தனுஷ் மேல் உள்ள பாசத்தில் இப்படத்தில் நடித்து கொடுத்திருப்பார் போல. சந்தீப் காதலியாக வரும் அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் என அனைவரின் நடிப்பும் கண்டிப்பாக ரசிக்க வைக்கிறது சரியான நடிகர் நடிகைகள் தேர்வு.

படத்தின் மேல் நமக்கு ஒரு தாக்கம் ஏற்படுகிறது என்றால் இசைப்புயலில் புயல்தான் காரணம். படத்தின் பின்னணியில் வரும் மிக நீண்ட இசையும் சரி பாடல்களும் சரி நம்மை அதிர வைக்கிறது.

மொத்தத்தில் ‘ராயன்’ நடிப்பில் மட்டுமல்ல இயக்கத்திலும் நான் ஒரு அசுரன் என நிரூபித்து வெற்றி அடைந்துள்ளார்.

Rating :3.75/5