News
தனுஷின் திருச்சிற்றப்பலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். அனைத்து படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படம் ஜூலை 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஒரு சில நாட்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
தனுஷூடன் இப்படத்தில் ராஷி கன்னா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.