Reviews

வாத்தி – விமர்சனம் !

Published

on

Movie Details

தெலுங்கு திரைப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை சம்யுக்தா மேனன், சமுதிரக்கனி, கென் கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

படத்தின் கதை :
1995 தொடக்க காலக்கட்டத்தில் இந்தியாவில் தனியார் மயமாக்கல் கொள்கை சட்டம் அமலுக்கு வருவதால் பிற்காலத்தில் கல்வியின் வியாபார வியாபார வளர்ச்சியை தெரிந்து கொண்ட தனியார் பள்ளிகள், நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையங்களை தொடங்கி நன்கு தேர்ந்த பள்ளி ஆசிரியர்களை விலைக்கு வாங்கி அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துகின்றனர். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்கக்கோரி மக்கள் போராட்டம் நடத்துவதால் ஏற்படும் பிரச்னையை கொண்டு கதைக்களம் உருவாகிறது. அந்த இக்காட்டான சூழ்நிலையில் அந்த கூட்டமைப்பின் தலைவராக வரும் சமுத்திரக்கனி அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அனைவருக்கும் கல்வி கொடுப்பதாக அறிவிக்கிறார். மூடப்பட்ட அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த இரண்டாம், மூன்றாம் தர ஆசிரியர்களை அனுப்பி கல்வியை கொடுக்கப்போவதாக வாக்குறுதியை கொடுக்கிறார். அந்த சமயத்தில் தான் இரண்டாம் மூன்றாம் தர வரிசையின்.

ஆசிரியராக வருகிறார் தனுஷ். ஒரு கூட்டத்தில் சமுத்திரக்கனி இரண்டாம் மூன்றாம் தர வரிசையின் ஆசிரியர்களிடம் யாராவது ஒரு பள்ளியில் எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுக்கவைக்கும் ஆசிரியர்க்கு சில சலுகைகள் தரவப்போவதாக அறிவிக்கிறார். அதை சவாலாக ஏற்றுக்கொண்ட தனுஷ் திருப்பதியில் உள்ள ஒரு பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார் அந்த கிராமத்தில் அவர் சந்திக்கும் பிரச்னைகளையும் சமுத்ரகனியின் உண்மை முகம் தெரிந்து அவருடன் நடக்கும் பனிப்போரையும் சமாளித்து பாஸ் ஆனாரா இல்லையா என்பதைத்தான் படத்தின் மீதி கதையாக படமாக்கி உள்ளார்.

படத்தின் கதாபாத்திரங்கள் :
படத்தின் “Center of Access“ என்றால் தனுஷை சொல்லலாம் அந்த அளவு படத்தில் நடிப்பில் சண்டை காட்சிகளில் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் பாலமுருகனாக நடிப்பில் அசத்தி இருக்கிறார் கொஞ்சம் அங்கங்கே சூப்பர் ஸ்டாரின் சாயலை நடிப்பில் காப்பி அடிப்பது அப்பட்டமா தெரிகிறது மீனாட்சியாக வரும் நாயகி சம்யுக்தா மேனனுக்கு பெரிய அளவில் கேரக்டர் இல்லை, அவரின் நடிப்பிலும் ஒரு அழுத்தம் இல்லை. வடசென்னை படத்தில் தனுஷின் வில்லனாக வந்து கலக்கி இருப்பார், சமுத்திரக்கனி அதேபோல இந்த படத்தில் மிரட்டுவார் என எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் படத்தில் எதோ வில்லன் என்ற பெயரில் படத்தில் அங்கங்கே வந்து போகிறார் நட்புக்காக ஒரே ஒரு காட்சியில் இயக்குநர் பாரதிராஜா தலைகாட்டுகிறார். சாம்பாரில் வரும் கருவேப்பில்லையை போல் படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் வருகிறார் கென் கருணாஸ் , அவரின் கதாபாத்திரம் எதற்கு என்று தெரியவில்லை மொட்டை ராஜேந்திரன் சில காட்சிகளில் வந்து போகிறார் மற்றபடி படத்தில் சொல்வதுபோல் கதாபாத்திரகள் என யாரும் இல்லை.

படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ் :
நாட்டில் பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் நடக்கும் வியாபாரிகளின் வியாபாரகங்ளையும் அவர்கள் செய்யும் அட்டுழிகளையும் கதையின் கருவாக கொண்டு அதை திரையில் தைரியமாக காட்ட நினைத்திருக்கும் இயக்குனரின் புது முயற்சிக்கு ஒரு சபாஷ் போடலாம். அதேபோல படத்தில் படிப்பு தான் மரியாதையை சம்பாதிச்சு தரும், படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி கொடுங்க.. அதை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி விற்காதீங்க , கல்வியில கிடைக்கிற காசு அரசியல்ல கூட கிடைக்காது என ஆங்காங்கே வரும் வசனங்கள் கைதட்ட வைக்கிறது. படத்தில் நடிப்பு சண்டைக்காட்சி களில் தனுஷ் வேறொரு பரிமாணத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார். அடி ஆத்தி பாடலிலும் பின்னணி இசையிலும் G. V. ப்ரகாஷ் மிரட்டி இருக்கிறார்.

படத்தின் பெரிய மைனஸ் ஆகா தெரிவது படம் முழுக்க தெலுங்கு சினிமா மேக்கிங் ஸ்டைல் அப்படியே தெரிகிறது. எப்போதும் போல மாணவர்களை கதாநாயகன் திருத்துவது அதே பள்ளியில் ஆசிரியராக வரும் கதாநாயகியின் மேல் காதல் கொள்வது என ஏற்கனவே வந்த சாட்டை , Freedom Writers போன்ற திரைப்படங்களில் வரும் காட்சிகளை கொண்டு அரைத்த மாவையே திரும்ப இந்த படங்களில் அரைத்து இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க ஊரில் உள்ள தியேட்டரை பயன்படுத்துவது, விதவிதமான கெட்டப் போட்டு பாடம் நடத்துவது , பாரதியார் வேடம் போட்டு தனுஷ் சண்டை போடுவது, வில்லன்களும் ஊர் மக்களும் உடனே மனம் மாறுவது போன்ற லாஜிக் இல்லாத காட்சிகள் படத்திற்கு பெரும் பின்னடைவு என சொல்லலாம்.

மொத்தத்தில் ஆந்திர மீல்ஸை கொண்டு தமிழ்நாட்டில் விருந்து படைக்க நினைத்து இருக்கிறார்கள். அந்த விருந்து மக்களை திருப்திப்படுத்துகிறதா இல்லையா , வாத்தி மக்களின் மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைவரா இல்லையா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Vaathi Review By CineTime

[wp-review id=”45482”]

Trending

Exit mobile version