News

வசூல் சாதனை படைத்து வரும் தனுஷின் வாத்தி 100 கோடியை தாண்டுமா?

Published

on

தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான திரைப்படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கியிருந்த இப்படத்தில் சம்யுக்தா மற்றும் சமுத்திரக்கனி, பாரதிராஜா, சாய்குமார், தணிகலமரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட ஆகியோர் நடித்திருந்தனர்.

கடந்த வாரம் இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி இந்த படத்தின் கதையை நம்பி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வம்சி மற்றும் எனக்கு முழு ஆதரவு கொடுத்த தனுஷ் இருவருக்கும் நன்றி.

இப்போது வரை 8 நாட்களில் 75 கோடி வசூல் செய்துள்ளது வாத்தி திரைப்படம். இப்படம் என்னுடைய கனவு திரைப்படம். தனுஷுடன் இப்படத்தில் பணியாற்றிய போது அவருடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டு இன்னும் நல்ல டெக்னீசியனாக மாறியுள்ளேன் என்று கூறினார்.

இந்த வாரம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் நன்றாக ஓடினால் ரூ.100 கோடி வசூலைத் தாண்ட அதிக வாய்யுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் கூறுகிறது.

Trending

Exit mobile version