Teaser

துருவ நட்சத்திரம் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு !

Published

on

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். கடந்த 2017-ஆம் ஆண்டு இப்படத்தின் டீஸர் வெளியானது. இப்படத்தில் விக்ரமுடன் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்ய தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இப்படம் வெளியாகும் எனவும் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதலும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இப்படம் லியோ படத்துடன் மோதும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் நவம்பர் 24-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு வீடியோ அறிக்கை மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

 

 

 

Trending

Exit mobile version