Connect with us
 

News

நீங்கள் ஹாலிவுட்டில் படம் எடுக்க விரும்பினார் சொல்லுங்கள் பேசுவோம் – ஜேம்ஸ் கேமரூன் !

Published

on

நீங்கள் ஹாலிவுட்டில் படம் எடுக்க விரும்பினார் சொல்லுங்கள் பேசுவோம் ஜேம்ஸ் கேமரூன் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் RRR திரைப்படம். இப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது வென்றது.

கோல்டன் குளோப் விருதில் ஒரிஜினல் பாடல் பிரிவில் சிறந்த பாடலாக நாட்டு நாட்டு பாடல் விருது வென்றுள்ளது. நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி நிகழ்ச்சி மேடையில் ஏறி கோல்டன் குளோப் விருதை பெற்றுக்கொண்டார்.

இந்த விருது விழாவில் இயக்குநர் ராஜமவுலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஹாலிவுட் முன்னணி பிரம்மாண்ட சாதனை இயக்குநர் அவதார் படத்தின் இயக்குநருமான ஜேம்ஸ் கேமரூமனை ராஜமவுலி சந்தித்தார். இந்த சந்திப்பில் இருவரும் பல்வேறு ருசிகர தகவல்களை பரிமாற்றிக்கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது நீங்கள் ஹாலிவுட்டில் படம் எடுக்க விரும்பினார் சொல்லுங்கள் நாம் அது குறித்து பேசுவோம் என்று ராஜமவுலியிடம் ஜேம்ஸ் கேமரூன் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.