News
டிக்கிலோனா இயக்குனர் திருமணம் சந்தானம் நேரில் சென்று வாழ்த்து !

சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா திரைப்படம் இப்படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இவரின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு அனைத்து திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவர் இயக்கும் டிக்கிலோனா படத்தில் சந்தானம் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் இயக்குனர் கார்த்திக் யோகியின் திருமணம் திருச்சியில் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டடு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதில் நடிகர் சந்தானமும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டிக்கிலோனா படத்தையடுத்து கார்த்திக் யோகி மீண்டும் சந்தானம் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மிக விரைவி இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.