News

பீஸ்ட் தெலுங்கு விநியோக உரிமத்தை கைப்பற்றிய தில்ராஜூ !

Published

on

தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’ ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என அறிவித்த நிலையில் இன்று ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அதற்கு காரணம் ஏப்ரல் 14-ம் தேதி இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் கே.ஜி.எப் – 2 படமும் வெளியாகிறது. கண்டிப்பாக இந்த இரண்டு படங்களுக்கும் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

இதன் காரணமாகத்தான் பீஸ்ட் படத்தை ஒரு நாள் முன்னதாக வெளியிடுகிறது தயாரிப்பு நிறுவனம் என்று கூறப்படுகிறது. அதனால் அதிக திரையரங்குகளில் வெளியிட்டு முதல் நாளே அதிக வசூலை பெறலாம் என்று இந்த முடிவை எடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் தெலுங்கு விநியோக உரிமத்தை தளபதி 66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கைப்பற்றியுள்ளார்.

Trending

Exit mobile version