News

இயக்குநர் மற்றும் நடிகருமான ஈ.ராமதாஸ் மறைவு !

Published

on

தமிழ் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் மரணம். இவரின் மறைவை அவரின் மகன் கலைச்செல்வன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்தார்.

அதில் குறிப்பிட்டிருப்பதாவது என் தந்தை இயக்குநர் எழுத்தாளர் நடிகர் ஈ.ராமதாஸ் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று காளை 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இவரின் இயக்கத்தில் ராஜா ராஜா தான், இராவணன், சுயம்வரம், ஆயிரம் பூக்கள் மலரட்டும், வாழ்க ஜனநாயகம், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு போன்ற படங்களை இயக்கியுள்ள இவர் பல படங்களிலும் நடித்துள்ளார். மாரடைப்பால் இறந்த ஈ.ராமதாஸ் அவர்களுக்கு வயது 66.

Trending

Exit mobile version