News

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி !

Published

on

திரையுலகில் சில திரைப்படங்கள் மட்டுமே அதன் அறிவிப்பு வெளியாகும்போதே பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக்கூடிய படைப்புகளாக இருக்கும். அந்த வகையில் ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்கும், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் வழங்கும் உதயநிதி ஸ்டாலினின் “நெஞ்சுக்கு நீதி” படம் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள, இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். முன்பே அறிவித்தபடி, இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்த, மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் ஹிட்டடித்த இந்தி திரைப்படமான ‘ஆர்டிகள் 15’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

Romeo Pictures இத்திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது. இந்த படத்தின் ஆடியோ லேபிளை Zee Music South வெளியிடுகிறது.

Trending

Exit mobile version