News
மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குநர் பாலா !
இயக்குநர் பாலா தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இயக்குநர்களில் இவரும் ஒருவர். விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது, பிதாமகன், சூர்யா நடிப்பில் வெளியான நந்தா, ஆர்யா நடிப்பில் வெளியான நான் கடவுள், விஷால் நடிப்பில் வெளியான அவன் இவன்’ ஆகிய இவர் இயக்கிய படங்கள் இன்று வரைக்கும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் திரைப்படங்கள்.
தற்போது சூர்யா நடிப்பில் புதிதாக ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த நிலையில் பாலா அவர்கள் மனைவியை விவாகரத்து செய்து விட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பாலா. இவர்களுக்கு பிராதானா என்ற ஒரு மகள் உள்ளார். கடந்த 18 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் பாலா மற்றும் முத்து மலர் இருவரும் சென்னையிலுள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்த தகவல் பாலாவின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.