News
மீண்டும் உண்மை சம்பவ கதையை இயக்கும் எச்.வினோத் !

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் கமல் ஹாசன் அடுத்து நடிக்கவுள்ளார். அதற்கு முன்னதாக யோகி பாபு நடிப்பில் சிறு பட்ஜெட் படத்தை ஒன்றை இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கமல் ஹாசனுக்கு எச்.வினோத் உருவாக்கியுள்ள கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே எச்.வினோத் சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களும் உண்மை சம்பவங்களின் அடிப்படையிலேயே உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.