News
ஷங்கர் படத்துக்கு கதை எழுதும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் !

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்றால் அது ஷங்கர்தான் தற்போது இந்தியன் 2 படத்தை நிறுத்தி விட்டு தெலுங்கில் ராம்சரண் நடிக்கவுள்ள ஒரு தெலுங்கு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.இப்படத்தில் ராம்சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில் இப்படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதி கொடுத்துள்ளாராம். இது நாள் வரை ஷங்கரின் படத்துக்கு அவரே கதை எழுதி வந்த நிலையில் முதல் முறையாக வேறு ஒருவரின் கதையை ஷங்கர் படமாக்கவுள்ளார்.
அது மட்டுமில்லாமல் இது முழுக்க முழுக்க அரசியல் கதையம்சம் கொண்ட படமாம். இதனால்தான் கார்த்திக் சுப்புராஜை கதை எழுத சொல்லியிருக்கிறார் ஷங்கர் என்றும் கூறப்படுகிறது.