News
இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை காரணம் என்ன?

பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் Lingusamy அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
கார்த்தி, சமந்தா நடித்த ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என இயக்குநர் Lingusamy மீது புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு சென்னையிலுள்ள சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்றது வந்தது.
இந்த வழக்கில் இன்று சைதாப்பேட்டை 3-வது விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சந்தோஷ் இயக்குநர் Lingusamy -க்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.