Connect with us
 

News

சர்தார் என்றால் என்ன பொருள் இயக்குநர் மித்ரன் விளக்கம் !

Published

on

விருமன்’ ஹிட் பொன்னியின் செல்வன் ஹிட் அடுத்து, வரும் தீபாவளிக்கு வெளியாகும் படம் “சர்தார்”. கார்த்தி தொடர் ஹிட்டை தொடர்ந்து வரும் சர்தார் படத்துக்கு கடும் உழைப்பை கொட்டி பிரமாண்ட சினிமாவாக உருவாக்கி வருகிறார்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் குழுவினர்.

இரும்புதிரை, ஹீரோ வித்தியாசமான கதை களங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக கார்த்தியுடன் கை கோர்த்திருக்கிறார், டைரக்டர் பி.எஸ்.மித்ரன் .

சர்தார் என்றால் பெர்சிய மொழியில் படைத்தலைவன்’னு பொருள் சர்தார் ஒரு ஸ்பை த்ரில்லர் கதை. உளவாளி என்பது நமக்கு தெரிந்ததெல்லாம் நாடுவிட்டு நாடு நடக்கிறதுதான். ஆனால் நம்மைச் சுற்றியே அவ்வளவு உளவாளிகள் இருக்காங்க. உளவுங்கிறது நாட்டோட ராணுவ ரகசியம் தெரிஞ்சுக்கிற வேலை மட்டுமில்லை. நமக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு டீக்கடை பையனிலிருந்து கூட அதை ஆரம்பிக்கலாம். ரொம்ப சிம்பிளான இடத்திலிருந்து தொடங்கி மிகப்பெரிய இடம் நோக்கி இன்டர்நேஷனல் வரைக்கும் உளவு போகுது. இதில் உலக அரசியலும் இருக்குது. இது சாமானியனை எப்படி பாதிக்கிறது என்பது பற்றிய கதை இது.

கார்த்தி, ‘சிறுத்தை’யில் ரத்னவேல் பாண்டியனாக விரைப்பும், ஜாலியாக இரண்டிலும் வந்தார். இதில் ஜாலியான போலீஸ்காரன் . அலப்பறையா இருக்கும்.
வயதான அப்பாவாக கார்த்தி கன கச்சிதம். இளமை, வயதானவர் இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும்.
மூணு மணி மேக்கப்.. அந்த மேக்கப் போட்டு டயலாக் பேசி நடிக்கவே கஷ்டம். இதில் கூடவே ஆக்ஷன் வேறு இருக்கும். அது ரொம்பவே கஷ்டம். இப்படி மெனக்கிட்டு கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார் கார்த்தி.