News

பீஸ்ட் படத்தின் வாய்ப்பை தவற விட்ட இயக்குநர் மிஷ்கின் !

Published

on

தளபதி விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தளபதிக்கு வில்லனாக நடிக்க இயக்குநர் செல்வராகவன் ஒப்பந்தமாகியுள்ளார். முதலில் இயக்குநர் மிஷ்கினை இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்களாம் படக்குழு.

ஆனால் பிசாசு 2 பட பணிகளில் பிசியாக இருந்ததால் அவரால் பீஸ்ட் படத்திற்கு தேதிகளை ஒதுக்க முடியவில்லையாம். இதையடுத்துதான் இயக்குநர் செல்வராகவனை வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.

Trending

Exit mobile version