Connect with us
 

News

இந்த வருட சிறந்த நடிகை ஆண்ட்ரியா அடித்து சொல்லும் இயக்குனர் மிஷ்கின் !

Published

on

2016-ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதில் ஒரு பேயை தேவதை போல சித்தரித்திருந்தார் இயக்குனர் மிஷ்கின்.

தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இதில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை பூர்ணா இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் நேற்று டுவிட்டர் கலந்துரையாடலில் பேசிய இயக்குனர் மிஷ்கின் நடிகை ஆண்ட்ரியா இப்படத்தில் வழக்கம் போல சிறப்பாக நடித்திருக்கிறார். நிச்சயமாக இந்த ஆண்டு அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இப்படத்திற்காக வாங்குவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் ஆண்ட்ரியா ஆடையில்லாமல் நிர்வாணமாக நடித்துள்ள செய்தி வெளியானது. அதற்கு மிஷ்கின் அப்படி அவரை நடிக்க வைத்து மிகவும் கஷ்டப்படுத்தி விட்டதாகவும் அதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறினார்.