Connect with us
 

News

தளபதி 66 படத்திலிருந்து விலகிய இயக்குநர் ராஜூ முருகன் !

Published

on

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குறார் வம்சி. இப்படம் விஜய்க்கு 66-வது திரைப்படம். தில் ராஜூ தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இப்படத்திற்கு தமிழில் வசனம் எழுத குக்கூ மற்றும் ஜோக்கர், ஜிப்சி படங்களின் இயக்குநர் ராஜூ முருகன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் நடிகர் கார்த்தி நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால் இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு பதிலாக பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.