News
பீஸ்ட் படத்தில் செல்வராகவன் வில்லன் கேரக்டர் இல்லையாம் !

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ்ட் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் செல்வராகவன் அவர்களும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இவர்தான் இப்படத்தின் வில்லன் என்று கூறி வந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி இவர் வில்லனாக நடிக்கவில்லையாம் என்றும் இப்படத்தில் விஜய்க்கு உதவு செய்யும் ஒரு அரசியல்வாதியாக நடித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இவர்தான் வில்லன் என்று நினைத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியாக அமைந்துள்ளதாம். இருந்தாலும் ‘பீஸ்ட்’ படத்தின் வில்லன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் தற்போது எழுந்துள்ளது.