Connect with us
 

News

12 வருட ஆயிரத்தில் ஒருவன் ரகசியத்தை வெளியிட்ட செல்வராகவன் !

Published

on

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன் இப்படத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் மற்றும் பலர் நடித்தனர். இது ஒரு அட்வென்ச்சர் படமாக வெளியானது ஆனாலும் வியாபார ரீதியாக பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் விமர்சன ரீதியாக நல்ல படம் என்று பல கோடி ரசிகர்களால் பேசப்பட்டது.

அப்போது அந்த படத்தை புரிந்து கொள்ள ரசிகர்களுக்கு புரிதல் இல்லை ஆனால் தற்போது அதை புரிந்து கொண்டு பேசி வருகிறார்கள் ரசிகர்கள்.

இந்தநிலையில் இன்று என்ன ஆனது என்று தெரியவில்லை திடீரென செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் அதில் கூறியதாவது:-

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடிதான் ஆனால் அதை ஒரு மெஹா பட்ஜெட் படம் என உயர்த்திக்காட்டுவதற்காக 32 கோடி பட்ஜெட் என அறிவிக்க முடிவு செய்தோம். என்ன ஒரு முட்டாள்தனம். படத்தின் உண்மையான பட்ஜெட்டை படம் வசூல் செய்திருந்தாலும் அது ஆவரேஜ் வசூல் என்றுதான் பேசப்படுகிறது. என்ன நடந்தாலும் பொய் சொல்லக்கூடாது என்பதை நான் கற்றுக்கொண்டேன் என்று 12 வருடமாக பாதுகாக்கப்பட்டிருந்த சிதம்பர ரகசியத்தை அனைவருக்கும் கூறிவிட்டார்.

செல்வராகவன் ஏன் எதற்கு இப்போது இந்த பதிவை பதிவிட்டார் என்று தெரியவில்லை ஆனால் செல்வராகவன் கூறுவதை பார்த்தால் சினிமாவில் கூறும் எல்லா பட்ஜெட்டும் பொய்யாக இருக்குமோ என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.