Connect with us
 

News

விஜய்க்கு வில்லனாக மாறிய செல்வராகவன் !

Published

on

கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கினார் விரைவில் இப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. தனது முதல் படமான கோலமாவு கோகிலா படத்திலேயே சற்று வித்தயாசமாக யோசித்து படமெடுத்து அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டவன். யோக்பாபுவை நயன்தாராவுக்கு யோடியாக வைத்து படம் எடுத்து புதிய முயற்சி செய்தவர்.

இந்த நிலையில் இவர் தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து இயக்கி வரும் படமான பீஸ்ட் படத்தில் மீண்டும் ஒரு புதிய முயற்சியை செய்துள்ளார். இயக்குநர் செல்வராகவனை இப்படத்தில் நடிக்க வைத்துள்ளார். அதவும் விஜய்க்கு வில்லனாக இதுவரை நடிக்கிறார் செல்வராகவன் பீஸ்ட் படத்தில் என்று கூறிவந்த நிலையில் இன்று அதை அதிகாரபூவமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

ஒரு இயக்குநராக மட்டுமே நமக்கு தெரிந்து வந்த செல்வராகவன் சாணிக்காயிதம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

செல்வராகவன் வில்லன் தளபதி விஜய் அந்த மாஸ்ஸான காட்சி எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.