News

கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யும் இயக்குனர் ஷங்கர் மகள் !

Published

on

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் இயக்குனர் என்றால் அது ஷங்கர் மட்டும்தான். ஜெல்டில்மேன், காதலன், இந்தியன், முதல்வன், எந்திரன். 2.0 வரை தமிழ் சினிமாவை சர்வதேச அளவில் கவனிக்க வைத்தவர் இயக்குநர் ஷங்கர். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து தெலுங்கு முன்னணி நடிகர் ராம்சரண் நடிப்பில் ஒரு படத்தையும் இயக்கவிருக்கிறார். இயக்குநர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் அதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு திருமணம் நிச்சயிக்கப்படுள்ளது.

மருத்துவரான ஐஸ்வர்யா ஷங்கர் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித்தை திருமணம் செய்யவிருக்கிறார். தமிழ்நாடு பிரியமர் லீக்கில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன்தான் இந்த ரோகித் 29 வயதான ரோகித் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் விளையாட இடம் கிடைக்காததால் 2015-ல் இலங்கைக்குச் சென்று விளையாடியவர். அதன் பின்னர் தந்தை தாமோதரனின் முயற்சியால் புதுச்சேரி ரஞ்சி அணி தொடங்கப்பட்டு அதற்கு கேப்டனாக மாறினார் ரோகித்.

நடப்பி சீசனில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் புதுச்சேரி அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று அதிகபட்ச ஸ்கோராக 63 ரன்கள் அடித்திருந்தார். ஐஸ்வர்யா – ரோகித் திருமணம் வரும் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் அளிமையான முறையில் நடக்கவிருக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் மிக பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர் குடும்பத்தார்.

Trending

Exit mobile version