News
தளபதி 69 படத்தின் தமிழக உரிமைக்கு போட்டி போடும் விநியோகஸ்தர்கள் !

தளபதி விஜய் நடிக்கும் 69-வது படத்தின் தமிழக விநியோக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இப்படம் தளபதி விஜய் முழு நேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக நடிக்கும் கடைசி படம். இப்படத்தின் படப்பிடிப்பில் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.
வெறும் 15 நாட்கள் மட்டுமே படப்படிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு உரிமத்தை இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய விலை கொடுத்து ஃபார்ஸ் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் தமிழக விநியோக உரிமத்தை வாங்க கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கு சுமார் ரூ.100 கோடி வரை விலை பேசப்பட்டு வருகிறது. பல முன்னணி விநோயோகஸ்தர்கள் வாங்குவதற்கு போட்டி போட்டாலும் லலித் குமாருக்குதான் கிடைக்கும் என்கிறது சினிமா வட்டாரம். விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் லியோ படங்களின் தயாரிப்பாளர் ஆவார்.