Connect with us
 

News

மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த டாக்டர் திரைப்படம் !

Published

on

நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்திற்கு பின்னர் இயக்குநர் நெல்சன் இயக்கிய திரைப்படம் ‘டாக்டர்’ இப்படத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன் நடித்திருந்தனர். இவர்களுடன் வில்லனாக நடிகர் வினய், யோகிபாபு, தீபா, அர்ச்சனா, ரெடின் கிங்ஸ்ஸி ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்திருந்தனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் பல சாதனைகளை புரிந்து வருகிறது.

இந்த வரும் வெளியான மாஸ்டர் படத்தின் வசூலை சாதனையை டாக்டர் திரைப்படம் தற்போது முறியடித்துள்ளது. இந்த வருடத்தில் அமெரிக்காவில் வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படமாக மாஸ்டர் திரைப்படம் இருந்து வந்தது.

ஆனால் கடந்த வாரம் வெளியான டாக்டர் திரைப்படம் அந்த சாதனையை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் 4 லட்சத்து 40 ஆயிரம் டாலர் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 4 லட்சத்து 39 ஆயிரம் டாலர் வசூலித்ததே சாதனையாக இருந்து வந்த நிலையில் தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.