Connect with us
 

News

100 கோடி வசூல் சாதனையில் இணைந்த டாக்டர் திரைப்படம் !

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றி பெற்றுக்கொடுத்தது.

ஆயுத பூஜை அன்ற் திரைக்கு வந்த பல படங்களில் வசூலையும் முடியடித்து சில வாரங்களுக்கு முன்னர் 90 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படம்தான் சிவகார்த்திகேயனின் படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம்.

இந்த நிலையில்தான் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளரான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சற்று முன்னர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துவிட்டது என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் படக்குழுவிம் இந்த செய்தி மூலம் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் 88 கோடி ரூபாய் வசூல் செய்ததே அதிகபட்ச வசூலாக இருந்துவந்தது இன்று அந்த சாதனையை டாக்டர் திரைப்படம் முறியடித்துள்ளது.