News
50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வரும் டாக்டர் !
கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்கு பின்னர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய திரைப்படம் டாக்டர். அனிருத் இசையில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், வினய், யோகி பாபு என பலர் நடித்துள்ள இப்படம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியானது.
கொரோனா இரண்டாம் அலைக்கு பின்னர் சினிமா ரசிகர்களை திரையரங்கு வரவைத்த திரைப்படம் டாக்டர். படம் வெளியாகி 10 நாட்களில் சுமா ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
50 சதவீத இருக்கைகளுடன் இந்த அளவுக்கு வசூல் செய்திருப்பது மிகவும் ஆச்சர்யம் என்கிறது சினிமா வட்டாரம். கொரோனா முதல் அலைக்கு பின்னர் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையர்ங்கு உரிமையாளர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டது. அதன் பின்ன வெளியான சுல்தான், கர்ணன் ஆகிய படங்கள் ஓரளவு வசூலை மட்டுமே கொடுத்தது நல்ல வசூல் பெருவதற்கு முன்னரே கொரோனா இரண்டாம் அலை வந்து அதனை தடுத்து விட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
தற்போது இரண்டாம் அலைக்கு பின்னர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பின்னர் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிறது கோலிவுட் வட்டாரம். வரும் தீபாவளி வரை எந்தவொரு பெரிய படங்களும் வெளியாகது என்பதால் இன்னும் சில பல கோடிகளை வசூலிக்கும் என்கிறார்கள்.
டாக்டர் படத்தின் வெளியீட்டின் போது ஏற்பட்ட சிக்கலில் தனது சமபளத்தை விட்டு கொடுத்து பெரும் உதவி செய்தவர் சிவகார்த்திகேயன் என்பதும் குறிப்பிடத்தக்கது.