News

100 கோடி ரூபாய் வசூல் பட்டியலில் டான் திரைப்படம் !

Published

on

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான திரைப்படம் ‘டான்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

முதல் நாளில் 13 கோடியும் இரண்டாம் நாளில் 11 கோடியும் மூன்றாம் நாளில் 9 கோடியும் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் படங்களில் அதிக வசூல் செய்த படம் இதுதான் என்று கூறப்படுகிறது.

படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் இன்னும் ஒரு சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் இப்படம் 100 கோடி வசூல் பட்டியலில் இணைந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version