Connect with us
 

News

டான் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு ரசிகர்கள் கொண்டாட்டம் !

Published

on

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டான்’ இத்திரைப்படம் கடந்த வருடமே வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் காரணமாக இப்படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்தது படக்குழு.

இந்த நிலையில் தற்போது ‘டான்’ திரைப்படம் மார்ச் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு.

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, பாலசரவணன் மற்றும் சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரோடக்‌ஷன் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.