Reviews
எம்புரான் – திரைவிமர்சனம் !
Cast: Mohanlal, Tovino Thomas, Manju Warrier,
Production: Gokulam Gopalan
Director: Prithviraj Sukumaran
Screenplay: Murali Gopy
Cinematography: Sujith Vaassudev
Editing: Akhilesh Mohan
Music: Deepak Dev
Language: Tamil
Runtime: 2H 59Mins
Release Date: 27 March 2025
முதலில் லூசிப்பர் என்ன கதை, எப்படி இரண்டாம் பாகத்துடன் இந்த எம்புரான் இணைகிறது என்பதை பார்ப்போம். கேரளா முதல்வர் இறப்பிறகு பிறகு ஆட்சியை கைப்பற்றி மிகப்பெரிய போதை கும்பலை கொண்டு வர விவேக் ஓபுராய் முயற்சிக்கிறார்.
இதை அறிந்து களத்தில் இறங்கி ஸ்டிபன் நெடும்பள்ளி இதற்கு முற்றுபுள்ளி வைத்து ஆட்சியை இறந்த முதல்வர் மகனான டொவினோ தாமாஸிடம் ஒப்படைக்கிறார் மோகன் லால், இதோடு லூசிபர் முடிகிறது.
இப்போதும் எம்புரான், சரி டொவினோ மோகன்லால் விரும்பிய நல்லாட்சியை தந்தாரா என்றால், அங்கு தான் டுவிஸ்ட் ஊழலில் மூழ்கி உள்ளது இந்த கட்சி. அதோடு தான் செய்யும் தவறுகளை மறைக்க மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி, தனியாக கட்சி அதோடு சர்வதேச போதை கும்பல் வருகை என அனைத்தும் ஒன்று கூடுகிறது.இதை அறிந்த மோகன்லால் பிறகு என்ன மீண்டும் ஸ்டிபன் நெடும்பள்ளி வருகை , இந்த கூட்டத்தின் ஆட்டத்தை எப்படி அடக்குகிறார் என்பதே மீதிக்கதை.
படம் எப்படி இருக்கு
கதையின் நாயகன் மோகன்லாலின் இண்ட்ரோ காட்சி அவர் வரும் காட்சிகள் பிரம்மிக்க வைக்கிறது. மேலும் தனது அருமையான நடிப்பை வெளிப்படுதியுள்ளார்.
நடிகை மஞ்சுவாரியருக்கென்று மிக பெரிய முக்கியத்துவம் கொடுத்தது படத்தில் கூடுதல் பலம் தான். நடிகர் ப்ருத்விராஜ்க்கென்று தனி ட்ராக் பயணிக்க வைத்தது மற்றும் யார் இந்த ஜஎதி மசசூட் என்ற விளக்கம் படத்திற்கு மிகப்பெரும் பலம்.
மேலும் பிரம்மாண்டமான காட்சிப்பதிவுக்கென்று சிறப்பான ஒளிப்பதிவு, ஆச்சர்யப்பட வைக்கும் பின்னணி இசை, அசத்தலான கலை வடிவம், ரசிக்க
பின்னணி இசையில் மேலும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். மேலும் ஸ்டண்ட் சிவாவின் மிரளவைக்கும் சண்டை காட்சிகள்
வைக்கும் படத்தொகுப்பு என படத்தில் அனைத்துமே ப்ளஸ் தான். சிறப்பான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கதையை நன்றாகவே நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.
லூசிஃபர் படத்தில் காட்டிய அதே மிரட்டலான ஒரு ஆங்கில பட மேக்கிங்கை இப்படத்திலும் காட்டியிருக்கிறார் இயக்குனரான பிரித்விராஜ். ஒவ்வொரு காட்சியிலும் அப்படியொரு பிரமாண்டமான மேக்கிங் இருக்கிறது.
எம்பூரான படத்தின் முதல் பாதி ஆங்காங்கே சற்று திரைக்கதை மெதுவாக இருத்தாலும் , இரண்டாம் பாதி டாப் கியர் போட்டு வேகமெடுத்துச் செல்வது படத்திற்கு பலமாக இருக்கிறது.
கடைசியாக லூசிபர் 3ம் பாகத்திற்கான லீட் என ஒரு சில விஷயங்களே ரசிக்க வைக்கின்றது.
பிளஸ்
மோகன் லால் நடிப்பு மற்றும் சண்டை , இயக்குனர் திரைக்கதை ,மஞ்சு வாரியர் நடிப்பு,
மைனஸ்
கதையின் முதல் பாதி , பின்னணி இசை
மொத்தத்தில் “எம்புரான்” – மிரட்டல் அடி ஹிட்
Rating 3/5