சென்னையில் உள்ள ஒரு பிரபலமான Fm ஸ்டேஷனின் Rjவாக பணியாற்றி வருகிறார் அஸ்வின் அவருக்கு தன் மனைவியாக வரப்போகும் நபரின் மீது கொஞ்சம் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் அஸ்வினின் தந்தை அவருக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண்ணை பார்க்கிறார். அவர் தான் அவந்திகா மிஸ்ரா எழுத்தாளராக இருக்கும் இவருக்கும் தனக்கு வரப்போகும் கணவர் குறித்து சில எதிர்பார்புகள் இருக்கிறது. அதில் மிக முக்கியமாக தனக்கு வரப் போகும் கணவருக்கு கண்டிப்பாக ஒரு முன்னாள் காதல் கதை இருக்கும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
ஆனால், அஸ்வினுக்கு அப்படி எதுவும் முன்னாள் காதலியோ, காதல் கதையோ இல்லை. இருப்பினும் அவந்திகாவை திருமணம் செய்துகொள்ள விரும்பும் அஸ்வின் தனக்கு முன்னாள் காதலி இருந்தார் என்று பொய் சொல்கிறார். மேலும், தன் முன்னாள் காதலி என்று தியேட்டர் நடிகையான தேஜு அஸ்வினியை அறிமுகம் செய்து வைத்துவிடலாம் என்று திட்டமிடுகிறார் அஸ்வின். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக தேஜு மீதே காதலில் விழுகிறார் அஸ்வின். பின் அஸ்வினுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அவர் யாரை திருமணம் செய்துகொண்டார் என்பதே இந்த படத்தின் மீதி கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின், காதல் கதைக்கு ஏற்ற தேர்வு. அஸ்வினும் காதல் காட்சிகளில் ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார்.
சென்டிமென்ட் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். அஸ்வினின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக இல்லை, அதிலும் குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் நடிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்.
நாயகிகளாக வரும் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா ஆகியோர் அழகாக வந்து சொன்ன வேலையை செய்திருக்கிறார்கள்.
குக்குவித் கோமாளியில் ஒர்க்கவுட்டான அஸ்வின் – புகழின் மாமா மச்சான் காம்போ படத்தில் சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை.
புகழின் காமெடி டிவியில் பார்க்க மட்டுமே எடுபடும் என்பதற்கு சபாபதி படத்திற்கு பின் இந்த படமும் ஒரு உதாரணம்.
Cinetimee
காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் ஹரிஹரன். முதல் பாதி கவர்ந்த அளவிற்கு இரண்டாம் பாதி கவரவில்லை. நிறைய காதல் காட்சிகள் படத்தில் வந்தாலும், பெரியதாக மனதில் ஒட்டவில்லை என்பது வருத்தம்.
கதாபாத்திரங்களுக்கிடையிலான உணர்வுப் போராட்டம் என ஓரளவு சுவாரஸ்யமாகவே செல்கிறது. தனது வருங்கால மனைவியிடம் அஸ்வின் சொல்லும் பொய்யான ஃப்ளாஷ்பேக் காட்சியும், பின்னர் அதை உண்மையாக்க ஒரு பெண்ணைத் தேடி அலைந்து திரிவதும் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதல் பாதியில் தேஜு அஸ்வினி – அஸ்வின் இடையில் காதல் மலரும் காட்சிகள் அருமை. அதனை வெளிப்படையாக எடுத்த எடுப்பிலேயே போட்டுடைக்காமல் ஒரு மெல்லிய உணர்வு போல சிறிது சிறிதாக வெளிப்படுத்தியிருந்தது ரசிக்கும்படி இருந்தது.
முதல் பாதியில் கொடுத்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் மொத்தமாக கோட்டை விட்டுள்ளார். முதலில் அஸ்வினுடைய கதாபாத்திரம் என்ன? ஆரம்பத்தில் தன்னுடைய இதயம் சொல்வதை மட்டுமே கேட்கும் நபர் என்று காட்டப்படுகிறார். ஆனால் இரண்டாம் பாதி முழுக்கவே அவரை ஒரு தடுமாற்றமான ஆளாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஹரிஹரன்.
அதே போல ரிச்சர்ட் எம்.நாதனின் ரிச்சான ஒளிப்பதிவும் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.
படத்தில் விவேக் – மெர்வினின் பின்னணி இசை பாராட்டத்தக்கது. பல காட்சிகளில் மெல்லிய மயிலிறகைப் போல மனதை வருடுகிறது. பாடல்களில் ‘க்யூட் பொண்ணு’ பாடலும் ‘நீதானடி’ பாடலும் சிறப்பு.