Connect with us
 

News

என்ன சொல்ல போகிறாய் படப்பிடிப்பு அடுத்த மாதம் 19-ம் தேதி ஆரம்பம் !

Published

on

குக் வித் கோமாளி சீசன் 2 புகழ் அஸ்வின் மற்றும் புகழ் இணைந்து நடிக்கும் படத்திற்கு என்ன சொல்லப்போகிறாய் என்ற தலைப்பி வைத்துள்ளனர். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இப்படத்தை இயக்குகிறார்.படத்தை பற்றி கூறியதாவது:-

காதல், காமெடி, கலந்த இப்படத்தில் அஸ்வின் மற்றும் புகழ் நடிக்கின்றனர். இரண்டு நாயகிகள் உள்ளனர். நாயகி தேர்வு நடந்து வருகிறது. டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.

அவரிடம் சொன்ன போது அனைவரையும் தேர்ந்தெடுப்பத்தில் முக்கிய பங்கு வகித்தார். தொழிநுட்ப கலைஞர்கள் அனைவரும் முடிவாகிவிட்ட. விளம்பர படங்களை இயக்கிய எனக்கு இதுதான் முதல் படம்.

இப்படத்தில் இசைக்கு மிக முக்கியத்துவம் இருக்கும் படத்தின் கலைஞர்கள் அனைவருக்கும் இப்படம் சவாலாகவிருக்கும். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அடுத்த மாதம் 19-ம் தேதி ஆரம்பமாகிறது.