News
தந்தையின் பட தலைப்பை தன் படத்துக்கு வைத்த சூர்யா !

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் இவரின் 40-வது படத்தில் ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன், சத்யார, சரண்யா பொன்வண்ணன், சூரி, திவ்யதர்ஷினி, திவ்யா துரைசாமி, பலர் நடித்து வருகிறார்கள். இப்படம் பொள்ளாச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்படும் திரைப்படம்.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தடை பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் இரு தினங்களுக்கு முன்னர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 22 அன்று மாலை 6 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் கூடிய சிறிய டீசர் வெளியாகியுள்ளது. அந்த டீஸரில் சூர்யா நீண்ட தலைமுடியுடன் கையில் வாலுடனும் துப்பாக்கியுடனும் சிலை வதம் செய்வது போல சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
எதற்கும் துணிந்தவன் என்ற பெயரில் சூர்யாவின் அப்பா சிவக்குமார் இதே பெயரில் 1976-ம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.