Connect with us
 

News

பசுபதி பெயரிலும் போலி டுவிட்டர் கணக்கு !

Published

on

சமூக வலைத்தளமான டுவிட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட பக்கங்களில் நடிகர் நடிகைகள் பெயரில் போலி கணக்குகள் தொடங்குவரும் பின்னர் அந்த நடிகர் நடிகைகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பதும் சினிமாவில் வழக்கமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் குணச்சித்திர நடிகர் பசுபதி பெயரில் டுவிட்டர் கணக்கு தொடங்கியுள்ளனர். அதில் பசுபதியின் புகைப்படங்கள் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. இதை விட வேடிக்கை என்னவென்றால் அவர் பதிவு செய்வது போன்ற பதிவுகளும் பதிவிட்டு வருகிறார்கள். இதை உண்மை என்று நம்பி ரசிகர்ளும் பின் தொடர்ந்து ஏமாறுகிறார்கள்.

இது குறித்து பசுபதியிடம் விசாரித்த போது நான் டுவிட்டர் போன்ற எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் இல்லை. ஆனால் சிலர் எனது பெயரில் போலியான கணக்குகளை ஆரம்பித்துள்ளனர். இது போன்ற போலி கணக்குகளை ரசிகர்கள் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம்.

நான் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் எனது நடிப்பையும் படத்தையும் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். எனது வாத்தியார் கதாப்பாத்திரத்தை நேர்த்தியாக செதுக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கு மிக்க நன்றி என்று தெரிவித்தார்.