News
என் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு சென்னை காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் !

பிரபல காமெடி நடிகர் சார்லி சென்னையில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.அதில் தனது பெயரில் போலியான டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுவுள்ளதாகவும் அதனை தொடங்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் கேட்டுள்ளாராம்.
அவரது மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடகம் மட்டும் திரைப்படங்களில் நடிகராக பணியாற்றி வருகிறேன். இது நாள் வரைக்கும் நான் எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் இல்லை என்பதனை மிகவும் தாழ்ம்மையுடன்தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய பெயரில் என் அனுமதியின்றி இன்று டுவிட்டரில் போலியாக கணக்கு துவங்கப்பட்டுள்ளது.
இதனை ஆரம்பத்திலெயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசின் காவல் துறைக்கு என் நன்றியும் வணக்கமும் என தனது புகாரில் கூறியுள்ளார்.