Connect with us
 

News

நயன்தாராவின் கனெக்ட் திரைப்படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர் !

Published

on

நெற்றிக்கண் படத்திற்கு பின்னர் நயன்தாரா மீண்டும் முதன்மை காதாப்பாதிரத்தில் நடிக்கும் திரைப்படம் கனெக்ட். இப்படத்தில் பாலிவுட் நடிகரான அனுபம் கெர இணைகிறார் இது குறித்து அனுபம் கெர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நான் எனது 522-வது படத்தில் நயன்தாரா , அஸ்வின் சரவணன், விக்னேஷ் சிவன் ஆகியோருடன் இணைகிறேன் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு மிக்க நன்று என பதிவிட்டுள்ளார்.

கனெக்ட் படம் குறித்து இயக்குநர் அஸ்வின் சரவணன் கூறியதாவது:- இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தை அனுபம் கெர் ஏற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நாங்கள் அவரது திரைப்படங்களை பார்த்து வளர்ந்தோம் அவர் எங்கள் திரைப்படத்தில் நடிப்பது உண்மையில் பெருமையாக இருக்கிறது. அவர் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் நட்புடன் இயழ்பாக பழகினார். மிகவும் எளிமையுடன் அவரது பாத்திரம் பற்றி விவாதித்து அதை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு தமிழ் திரைப்படத்தில் இணைந்ததற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர் தமிழ் திரையுலகினரின் தரம் மற்றும் பணியின் மீதான அர்ப்பணிப்பை பாராட்டி மகிழ்ந்தார்.

இந்த திரைப்படத்திற்கு பின்னர் தமிழ் படங்கள் குறித்த அவரது கருத்து மேலும் வலுவடையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்கிறார். இதில் அனுபர்கெர்ருடன் நடிகர் சத்யராஜ் அவர்களும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார். இப்படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்கிறார். பிருத்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.