News

பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் புற்றுநோயால் உயிரிழப்பு !

Published

on

தமிழ் திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடன இயக்குநர் கூல் ஜெயந்த். இவர் பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர்.
காதல் தேசத்தில் ஓ..மரியா பாடலின் நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது.

அதேபோல் ஏப்ரல் மாதத்தில், , குஷி படத்தில் மொட்டு ஒன்று.., ப்ரியமானவளே வில் வெல்கம் பாய்ஸ் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இவர் சில காலமாகவே கேன்சரால் அவதிப்பட்டு வந்தார். இன்று காலை உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என அவரது குடும்பத்தின் அறிவித்துள்ளனர்.கூல் ஜெயந்த் மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version